Sunday, April 14, 2024

நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்

 

Kanmalai Christian Church

Word of God : Sis. Lydia

Date: 14.04.2024

மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

உலகத்தின் முடிவு பரியந்தம், சகல நாட்களிலும் தேவன் நம்முடனே கூட இருக்கிறார். அவர் சமூகம் உங்களுடன் இருக்கும், அவர் பிரசன்னம் நம்முடன் எப்போதும் இருக்கும், அவருடைய சமாதானம் உங்களுடன் இருக்கும். கர்த்தரை மட்டும் உறுதியாய் பற்றி கொண்ட மனது உடையவர்களையும், அவரையே நம்பி இருக்கிறவர்களையும் தேவன் பூரண சமாதானத்தை அளித்து காத்து கொள்கிறார். உங்கள் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாய் இருப்பதை காண்பீர்கள். 

சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

I கொரிந்தியர் 7:15
ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

I கொரிந்தியர் 14:33
தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

ஆண்டவர் அருளிய வேதத்தை நேசிக்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும். அவருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் இருக்கும். அவர்களுக்கு ஒருபொழுதும் இடறல் வருவதில்லை. நாம் வேதத்தை நேசிக்கும் பொழுது நாம் கையிட்டு செய்கிற காரியங்கள் எல்லாவற்றையும் தேவன் வாய்க்க செய்வார். கர்த்தருடைய ஆலோசனைகளின் படி நடக்கிறவர்களுக்கு பெரிய சமாதானத்தை தேவன் தருகிறார். அவருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு எந்த காரணங்களும் அவர்களுடைய சமாதானத்தை குலைக்காது. நிறைவான சமாதானம் வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு உரியது. வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு எந்த சூழ்நிலையும் இடறல் செய்யாது. வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு எந்த ஒரு காரியமும் தடைபடாது. அதுமட்டும் அல்லாமல் வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சிந்தையிலே ஒரு சமாதானம் எப்பொழுதும் இருக்கும். 







Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment