Sunday, March 17, 2024

ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்

 

Kanmalai Christian Church

Word of God: Pas. Johnson Israel

Date:17.03.2024

எசேக்கியேல் 34:22
நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்

எசேக்கியேல் 34:23
அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

தேவன் சொல்லுகிறார் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன் எனவே நம்மை நாமே நிதானித்து பார்க்க வேண்டும். அனுதினமும் நாம் மனம் திரும்ப வேண்டும். ஆண்டவரிடத்தில் ஒப்புரவு ஆக வேண்டும். நியாத்தீர்ப்பின் நாள் வெகு விரைவில் இருக்கிறது எனவே நாம் தேவனுக்கு முன்பாக நிற பாத்திரவான்களாய் ஆக நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 

எசேக்கியேல் 34:14
அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

எசேக்கியேல் 34:15
என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 34:16
நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

நம் ஆணடவராகிய இயேசு நம்மை நல்ல மேய்ச்சலில் தான் மேய்ப்பார். நல்ல தொழுவங்களில் (ஆலயத்தில்) இருக்கும்படியாக தேவன் தம்முடைய ஆடுகளை மேய்ப்பார். நல்ல மேய்ச்சலில் நம்மை நடத்திக் கொண்டு போவார்.

யோவான் 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

யோவான் 10:28
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

யோவான் 21:15
அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

யோவான் 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

1. காணாமல் போன ஆடு 

லூக்கா 15:4
உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

லூக்கா 15:5
கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,

லூக்கா 15:6
வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

லூக்கா 15:7
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நம்முடைய தேவன் காணாமல் போன ஆட்டின் மேல் நோக்கம் உள்ளவராய் இருக்கிறார். எப்படி மேய்ப்பன் தன் மந்தையில் உள்ள நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போனால் அந்த ஒரு ஆட்டை தேடி கண்டுபிடித்து தன்னுடைய தோலின் மீது சுமந்து வந்து மகிழ்ச்சியோடே இருக்கிறாரோ அது போல தான் மனம் திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம் ஆக பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகி இருக்கும். இன்றைக்கும் நாம் ஆண்டவரை விட்டு மிகவும் தூரமாய் சென்று விட்டோமா ?, அந்த காணாமல் போன ஆட்டை போல இருக்கிறோமா ? நம்மை நாமே சோதித்து பார்ப்போம். அவர் நம் மேல் நோக்கமாய் இருக்கிறார், தேவனிடத்தில் கிட்டி சேருவோம், அவர் தம் தோலின் மேல் நம்மை சுமந்து வழிநடத்துவார். 

2. காணாமல் போன வெள்ளி காசு 

லூக்கா 15:8
அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?

லூக்கா 15:9
கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?

லூக்கா 15:10
அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஒரு ஸ்த்ரீ பத்து வெள்ளி காசுகளை உடையவளாய் இருந்து காணாமல் போன அந்த ஒரு வெள்ளி காசை வீட்டில் விளக்கை கொளுத்தி, வீட்டை பெருக்கி அதனை கண்டுப்பிடித்து அயல் வீட்டு காரரை அழைத்து சந்தோஷப்படுகிறாள். இன்றைக்கும் கூட நாம் கர்த்தர் நமக்கு கொடுத்த எந்த வெள்ளி காசை தொலைத்து இருக்கிறோம் என்பதனை நிதானித்து அறிந்து பார்க்க வேண்டும். இரட்சிப்பை தொலைத்து இருக்கிறோமா ? அபிஷேகத்தை தொலைத்து இருக்கிறோமா ? தேவனுடைய அழைப்பை மறந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா ? நாம் தேடி மீண்டுமாய் கண்டுப்பிடிப்போம் என்று சொன்னால் நமக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும் காரியங்கள் எல்லாம் வாய்க்கும் மேலும் நம் மனம் திரும்புதலின் நிமித்தமாக பரலோகத்தில் மிகுந்த சந்தோசம் உண்டாகி இருக்கும். 

3. காணாமல் போன கெட்ட குமாரன் 

லூக்கா 15:11
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.

லூக்கா 15:12
அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

லூக்கா 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

எசேக்கியேல் 36:26
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

எசேக்கியேல் 36:27
உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.

இளையகுமாரன் தன் தகப்பனிடத்தில் ஆஸ்தியில் பங்கிட்டு கொடுக்க வேண்டும் கேட்டதும் அவர் பங்கிட்டு கொடுத்தார் சில நாள் சென்ற பின்பு இளைய குமாரன் எல்லாவற்றையும் சேர்த்து கொண்டு தன் தகப்பனை விட்டு தூரம் தேசம் சென்று அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பன்னி தன்னுடைய ஆஸ்தியெல்லாம் அழித்து போட்டான். நம்முடைய ஜீவியத்தில் துன்மார்க்கத்துக்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்க கூடாது அது நம் ஆசீர்வாதங்களை எல்லாம் அழித்து போடும், தேவனுக்கு விரோதமான துன்மார்க்க ஜீவியம் நம்மில் காணப்பட கூடாது நாம் மனம் திரும்புவோம் என்று சொன்னால் தேவன் நம்மை கட்டி அனைத்து முத்தம் செய்து அவரிடத்தில் சேர்த்துக்கொள்வார்.







Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment