Sunday, February 5, 2023

என் தேவன் என் பெலனாயிருப்பார்

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Micheal

Date: 5.2.2023

ஏசாயா 49:3
அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.

ஏசாயா 49:4
அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.

ஏசாயா 49:5
யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத் தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.

சங்கீதம் 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

நாம் எவ்வளவோ பிரயாசப்பட்டும் அதற்கான பலனை காண முடியவில்லையா, விருதாவாய் உழைக்கிறோம் அதற்கேற்ற பலனை உங்களால் காண முடியவில்லையை சோர்ந்து போக வேண்டாம். நீங்கள் படுகிற பிரயாசங்கள் எல்லாம் தேவனுடைய பார்வையில் கனமடைய தக்கதாய் இருக்கிறது. தேவன் நமக்கு பெலனாய் இருக்கிறார். உங்கள் நியாயம் கர்த்தரிடத்தில் இருக்கிறது. விருதாவாய் உங்கள் உழைப்பு போகாது. அவை எல்லாவற்றிற்கும் கர்த்தரிடத்தில் இருந்து உங்களுக்கு பலன் நிச்சயமாய் வரும். 

அவர் எப்படிப்பட்ட பெலனாய் நமக்கு இருப்பார் ?

1. அவர் நமக்கு தேவபெலனைத் தருகிறார் 

ரோமர் 1:15
ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.

ரோமர் 1:16
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

கர்த்தர் நமக்கு தேவ பெலனாய் இருக்கிறார், இந்த தேவ பெலன் நமக்குள் இருக்கும் பொழுது பயமோ, தயக்கமோ, கலக்கமோ தைரியமாய் இந்த சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவர் நமக்குள் இருந்து நம்மை நடத்துகிறார்.   

2. அவர் நமக்கு மகா பெலனைத் தருகிறார் 

நியாயாதிபதிகள் 16:3
சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.

நியாயாதிபதிகள் 16:4
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்.

நியாயாதிபதிகள் 16:5
அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.

இங்கே சிம்சோன் பட்டணத்து வாசல் கதவுகளை தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து எடுத்து தன் தோள்களின் மேல் வைத்து கொண்டு எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சி வரை சுமந்து கொண்டு போகிறார். மகா பெலனை உடையவராக சிம்சோன் காணப்பட்டார். உங்கள் வாழ்க்கையிலும் வெகு காலமாக எவை எல்லாம் தாழ்பாள் போட்டு மூடி இருக்கிறதோ அவற்றை பெயர்த்து போடத்தக்கதான மகா பெலனை தேவன் இன்றைக்கு உங்களுக்கு கட்டளையிடுவார். 

3. அவர் நம் ஜீவனுக்கு பெலனைத் தருகிறார் 

சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?

சங்கீதம் 27:2
என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.

சங்கீதம் 27:3
எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு ஜீவனின் பெலனாய் இருக்கிறார். அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். தாவீதின் வாழ்க்கையிலே அநேக போர்களை கண்டதுண்டு ஆனாலும் அவர் இப்படியாய் சொல்லுகிறார் கர்த்தர் எனக்கு ஜீவனின் பெலனாய் இருக்கிறார். இன்றைக்கு நம்முடைய ஜீவனுக்கும் கர்த்தர் பெலனாய் இருக்கிறார். இந்த ஜீவனின் பெலன் நாம் நம்பிக்கையாய் இருக்கும் பொழுது கர்த்தர் நம்மை கரை சேர்த்திடுவார். 

4. அவர் நமக்கு ஆவியிலே பெலனைத் தருகிறார் 

லூக்கா 2:39
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.

லூக்கா 2:40
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.

நாம் வாழ்க்கையில் நம்மை வழிநடத்துவதற்கு ஆவியின் பெலன் மிகவும் அவசியம். இந்த ஆவியின் பெலன் ஒரு பூரணமான ஞானத்தை நமக்கு தந்து நம்மை வழிநடத்துகிறதாய் இருக்கிறது. நாம் போகிற வழியில் நாம் பதறாமல் முன்னேறி செல்வதற்கு தேவன் நமக்கு ஆவியிலே பெலனை தருகிறார். 

5. அவர் நமக்கு புதுபெலனைத் தருகிறார் 

யோபு 29:19
என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது.

யோபு 29:20
என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.

வறண்டு இருக்கிறதான நம் வாழ்க்கையிலே தேவனை தண்ணீரை படர செய்து பனி இரவு முழுவதும் தங்கி இருக்கும்டி செய்வார். கர்த்தர் இன்றைக்கு உங்கள் மகிமையை செழித்தோங்கும் படி செய்வார். உங்கள் வில்லுக்கு கர்த்தர் புது பெலனை கர்த்தர் தருகிறார்.   









Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment