Monday, December 19, 2022

இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம்

 

Kanmalai Christian Church

Word of God : Pastor Micheal

Date: 19.12.2022

I சாமுவேல் 18:18
அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.

தாவீது சவுலை பார்த்து இப்படியாய் சொல்லுகிறார், ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இந்த ஒட்டுமொத்த இஸ்ரவேலிலே என்னுடைய குடும்பம் எம்மாத்திரம். இன்றைக்கு நம்முடைய இயேசு ராஜாவின் கண்களிலே மருமகனாக அல்ல பிள்ளையாய் நம்மை தெரிந்து கொண்டு இருக்கிறார். யாருக்கும் கிடைக்காத சிலாக்கியம் நாம் பரிசுத்த மணவாட்டியாய் தேவன் தெரிந்து கொண்டு இருக்கிறார். அவர் மணவாளன் நாம் மணவாட்டி ராஜாவின் கண்கள் நம்மை காண்கிறது அதற்கு நாம் எம்மாத்திரம்.  

1. (அப்பமும், மீனும்) இந்த ஜனத்திற்கு எம்மாத்திரம் 

யோவான் 6:7
பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.

யோவான் 6:8
அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி:

யோவான் 6:7
இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.

யோவான் 6:10
இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள்.

யோவான் 6:11
இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார்.

யோவான் 6:13
அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.

இந்த ஆண்டு முழுவதும் நமக்கு இருக்கிறதான கொஞ்சத்தை தேவன் ஆசீர்வதித்தாரே, இந்த வருடம் முழுவதும் நம்மை புல்லுள்ள இடங்களில் அமரச்செய்து நம்மை போஷித்தாரே அதற்கு நாம் எம்மாத்திரம். ஆண்டு முழுவதும் நாம் தோய்ந்து போகாதபடி நம்மை போஷித்து, விசாரித்து வந்த தேவனுக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

2. என் பெலன் எம்மாத்திரம் 

யோபு 6:11
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது?

எவ்வளவோ பெலவீனங்கள், எவ்வளவோ வியாதிகள் இந்த போதிலும் கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்தி நிலை நிற்க செய்தாரே என் பெலன் எம்மாத்திரம். நம்முடைய பெலவீனத்தில் கர்த்தர் அவர் பெலனை பூரணமாய் விளங்க செய்தாரே அதற்கு நாம் எம்மாத்திரம். சோர்ந்து போன நேரங்களில் எல்லாம் இந்த ஆண்டு நமக்கு பெலன் தந்து இந்நாள் வரையிலும் வழிநடத்தினாரே, தேவன் தந்த பெலத்திற்காக நன்றி செலுத்தி துதிப்போம்.   

3. என் ஜீவன் எம்மாத்திரம் 

I சாமுவேல் 18:18
என் ஜீவன் எம்மாத்திரம்

இந்த ஆண்டு முழுவதும் நமக்கு ஒரு சேதமும் இன்றி நம் ஜீவனை கர்த்தர் பத்திரமாய் காத்து கொண்டாரே அதற்கு நாம் எம்மாத்திரம். நம்மை சுத்த பொன்னாக விளங்க செய்யும் வரை கர்த்தர் நம்மை கைவிடமாட்டார். யோபுவை போல நம்மையும் கர்த்தர் உயர்த்தி ஆசீர்வதிப்பார். 

4. இஸ்ரவேலை (சபை) வழிநடத்த நான் எம்மாத்திரம் 

யாத்திராகமம் 3:11
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.

மோசே கர்த்தரிடத்தில் இஸ்ரவேல் புத்திரரை எகிப்தில் இருந்து அழைத்து வர நான் எம்மாத்திரம் ஆண்டவரே நானோ திக்கு வாயும் மந்த நாவும் உடையவனாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். அப்படி சொன்ன மோசேயை கொண்டு தேவன் தம்முடைய ஜனத்தை எகிப்தில் இருந்து அழைத்து வந்தார். அது போல கர்த்தர் இந்த ஆண்டு முழுவதும் சபைக்கு ஆவிக்குரிய மன்னாவையும், அபிஷேகத்தையும், வரங்களையும் கொடுத்து வழிநடத்த கிருபை செய்தாரே அதற்கு நாம் எம்மாத்திரம். 

5. என் வீடு எம்மாத்திரம் 

II சாமுவேல் 7:18
அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

தாவீது கர்த்தருடைய சமூகத்தில் உட்ப்ரவேசித்து இப்படியாய் சொல்லுகிறார் ஆண்டவரே இதுவரையிலும் என்னை கொண்டு வந்ததற்கு நான் எம்மாத்திரம் என் வீடு எம்மாத்திரம் என்று சொல்லுகிறார். இந்நாள் வரையிலும் ஒரு குறைவும் இல்லாமல் கர்த்தர் நம்முடைய வீட்டையும் விசாரித்து வந்தாரே அதற்கு நாம் எம்மாத்திரம். இதுவரையிலும் நம்மையும், நம் வீட்டையும் கொண்டுவந்தற்கு தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.






Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment