Monday, December 12, 2022

நான் கர்த்தர், நான் மாறாதவர்

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Jachin Selvaraj

Date: 11.12.2022

மல்கியா 3:6
நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.

நம் தேவன் இந்த ஆண்டை நாம் காண வைத்து இந்நாள் வரையிலும் அவர் நமக்கு நல்லவராக, வல்லவராக, மாறாதவராக நாம் நிர்மூலம் ஆகிவிடாதபடி கர்த்தர் எல்லா தீமைகளுக்கும் நம்மை விலக்கி காத்தார். நம்முடைய தேவன் மாறாதவர், வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் மாறாதவர். மனுஷருடைய வார்த்தைகள் மாறி போகலாம் ஆனால் தேவனுடைய வார்த்தைகள் என்றுமே மாறுவது இல்லை. எனவே தான் நம் ஆண்டவர் சொல்லுகிறார் நான் கர்த்தர் நான் மாறாதவர் ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. 

எண்ணாகமம் 23:19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

எண்ணாகமம் 23:19
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.

நாம் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. அதனால் தான் நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.  ஏன் நாம் இன்னும் ஆசீர்வதிக்கப்படவில்லை என்று சொன்னால் நாம் எந்த எந்த எல்லைகளில் தேவனோடு ஐக்கியமாக இல்லை என்பதை நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

ஆதியாகமம் 26:1
பிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

ஆதியாகமம் 26:2
கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.

ஆதியாகமம் 26:3
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

ஆதியாகமம் 26:4
ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,

ஆதியாகமம் 26:5
நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ஆதியாகமம் 26:24
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

ஆபிரகாமின் நாட்களில் வந்த பஞ்சத்தை போலவே ஈசாக்கின் காலத்திலேயும் பஞ்சம் வந்தது. அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போகிறார். கர்த்தர் ஈசாக்குக்கு நீ எகிப்துக்கு போகாமல் நான் உனக்கு சொல்லுகிற தேசத்தில் குடியிரு.  இந்த தேசத்திலே வாசம் பண்ணு அப்பொழுது நான் உன்னோடே இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் ஈசாக்கிற்கு வாக்குத்தத்தம் பண்ணுகிறார். இங்கே தேவன் ஆபிரகாமின் கீழ்ப்படிந்ததின் நிமித்தமாக ஈசாக்கை ஆசீர்வதிக்கிறார். பெற்றோர்களாகிய நாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து, பயந்து பிள்ளைகளை தேவ பயத்தோடு வளர்கிறோமா என்பதை நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக. ஆபிரகாம் தேவனுக்கு கீழ்ப்படிந்தார் அதனால் தான் கர்த்தர் அவரை ஆசீர்வதித்து அவர் சந்ததியையும் பெருகப்பண்ணினார். 

ஆதியாகமம் 26:7
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

ஆதியாகமம் 26:8
அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.

ஆதியாகமம் 26:9
அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.

தன்னுடைய மனைவியின் நிமித்தம் தம்மை கொள்ளுவார்கள் என்று எண்ணி ஈசாக்கு ரெபாக்களை தன் மனைவி என்று சொல்ல பயந்தார். தன் சகோதரி என்று பொய் சொல்லிவிட்டார். ஆனால் கர்த்தர் முன்னமே நான் உன்னோடே இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று ஆனாலும் ஈசாக்கிற்கு அவ்விடத்தின் மனுஷர் குறித்து பயந்தார். ஆனால் ஈசாக்கு தன் மனைவியோடு விளையாடி கொண்டு இருந்ததை ராஜா பார்த்துவிட்டார். ஆண்டவர் தன்னோடு இருக்கிறார் என்பதை இங்கே ஈசாக்கு மறந்து மனுஷர்களுக்கு பயந்து பொய் சொல்லிவிட்டார். மனுஷருக்கு பயப்படும் பயம் கன்னியை வருவிக்கும் என்று எழுதப்பட்டு இருக்கிறது. நம் தேவன் வாக்குமாறாதவர் நமக்கு சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவார். 

ஆதியாகமம் 26:12
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

ஆதியாகமம் 26:13
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

ஆதியாகமம் 26:14
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,

ஆதியாகமம் 26:16
அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

ஈசாக்கு கர்த்தர் சொன்ன வார்த்தையின் படி நான் சொல்லும் தேசத்தில் இரு இதே இடத்திலே ஆசீர்வதிப்பேன் என்று சொன்னார். அதே போல ஈசாக்கு அந்த தேசத்திலே விதை விதைத்தார் கர்த்தர் நூறு மடங்கு பலன் அடையும்படி செய்தார். ஈசாக்கு ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான் என்று பார்க்கிறோம். இதனால் பெலிஸ்தர் அவன் மேல் பொறாமை கொண்டார்கள். ஈசாக்கு பஞ்ச காலத்திலும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார். தேவன் அவர் தொழிலை ஆசீர்வதித்தார். அபிமலேக்கு ஈசாக்கிடம் நீ இங்கிருந்து போய் விடு எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய்  இருக்கிறாய் என்கிறார்கள். 

ஆதியாகமம் 26:17
அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,

ஆதியாகமம் 26:19
ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள்.

ஆதியாகமம் 26:20
கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 26:21
வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 26:22
பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 26:23
அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.

ஆதியாகமம் 26:24
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

இதனால் ஈசாக்கு அந்த இடம் விட்டு புறப்பட்டு கேராரின் பள்ளத்தாக்கிலே குடியிருந்தார். ஈசாக்கின் வேலைக்காரர் அங்கே துறவை வெட்டி நீரூற்றை கண்டார்கள். ஆனால் கேராரூர் மேய்ப்பர் இந்த நீரூற்று எங்களுடையது என்று ஈசாக்கின் மேய்ப்பரோடு கூட வாக்குதவாதம் பண்ணினார்கள் எனவே அதற்கு அந்த துறவிற்கு சேக்கு என்று பேரிட்டான். வேறொரு இடத்தில் துறவை வெட்டினார்கள் ஆனால் அதை குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான். பின்பு அவ்விடம் விட்டு சென்று வேறொரு இடத்தில் துறவை தோண்டினார்கள் அனால் அங்கு யாரும் வாக்குவாதம் பண்ணவில்லை எனவே தேவன் நம் தேசத்தில் பலுகி பெருகும்படிக்கு கர்த்தர் நமக்கு ஒரு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி அதற்கு ரெகொபோத் என்று பெயரிட்டார். எவ்வளவு சோதனை வந்தாலும் ஈசாக்கு கர்த்தரை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்தார் கர்த்தர் அவரை ஆசீர்வதித்தார். அதேபோல் நம்முடைய வாழ்க்கையிலும் எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் சரி கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிவோம் என்று சொன்னால் தேவன் நம்மை நிச்சயமாய் ஆசீர்வதித்து பெருகவே பெருகப்பண்ணுவார். கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பார். 












Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment