Sunday, May 15, 2022

ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்

 

Kanmalai Christian Church

Word of God : Brother Kamal

Date: 15.05.2022

ரூத் 1:14
அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.

பெத்லகேமிலே கர்த்தர் தும்முடைய ஜனங்களை சந்தித்து ஆகாரம் அருளினார் என்பதை அறிந்த நகோமி தன்னுடைய மருமக்களோடே மோவாப் தேசத்தை விட்டு புறப்பட்டாள். வழியிலே நகோமி தன்னுடைய இரு மருமக்களையும் பார்த்துப் நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்கு திரும்பிப்போங்கள் என்றாள். இருவரும் சத்தமிட்டு அழுதார்கள் ஓர்பாள் முத்தமிட்டு அழுதுவிட்டு தன் சொந்த ஜனங்களிடத்திற்கு சென்றாள் ஆனால் ரூத்தோ நகோமியை விடாமல் பற்றிக்கொண்டாள். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். என்று தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாய் தரித்து நின்றாள். நாமும் நம்முடைய சூழ்நிலைகள் நமக்கு எதிராக இருந்தாலும் கூட ரூத்தைப்போல கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் கர்த்தர் சார்ந்து வாழும் பொழுது தேவன் நமக்கு என்று சிறந்த எதிர்காலத்தை வைத்து இருக்கிறார். இங்கேயும் நாம் வேதாகமத்தில் ஐந்து நபர்கள் கர்த்தரை எப்படி விடாமல் பற்றிக்கொண்டு தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்கள் என்பதை நாம் இங்கே தியானிக்கலாம். 

1. தேவனை விடாமல் பற்றிக்கொண்ட யாக்கோபு 

தேவனோடு போராடி தேவ தயவை பெற்றுக்கொண்ண்டார் 
 
ஆதியாகமம் 32:24
யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,

ஆதியாகமம் 32:25
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

ஆதியாகமம் 32:26
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.

ஆதியாகமம் 32:27
அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.

ஆதியாகமம் 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

ஆதியாகமம் 33:4
அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.


யாக்கோபு ஏசாவிடத்திற்கு போகும் படியாக பிரயாணம் பண்ணுகிறார். அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து வியாகுலப்பட்டு தன்னிடத்தில் இருக்கிற ஜனங்களையும் ஆடுமாடுகளை இரண்டு பகுதியாக பிரித்து அனுப்புகிறார். ஏசா ஒரு பகுதியின் மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும் மற்ற பகுதி தப்பித்து கொள்ளும்  என்று எண்ணி அனுப்புகிறார். மேலும் தேவனை நோக்கி ஆண்டவரே நீர் என்னை தகப்பன் தேசத்திற்கு கூட்டிக்கொண்டு வந்து உனக்கு நன்மை செய்வேன் என்று சொல்லி இருக்கிறீர். பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று வாக்களித்து இருக்கிறீர் எனக்கு தயை செய்யும் என் சகோதரனாகிய ஏசாவின் கண்களுக்கு என்னை தப்புவியும் என்று வேண்டுகிறார். தன் வேலைக்காரரிடம் வெகுமதிகளை அனுப்பி விட்டு யாக்கோபு தனித்து இருந்து இரவு முழுவதும் தேவனோடு போராடினார் நீர் ஆசீர்வதித்தாலொழிய உம்மை நான் போக விடேன் என்று தேவன் விடமால் பற்றி கொள்ளுகிறார். அப்பொழுது அவர் இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும் தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டாயே என்று அவரை ஆசீர்வதித்தார். யாக்கோபு பயப்பட்ட காரியம் அவருக்கு நேரிடவில்லை தன் சகோதரனிடத்தில் கர்த்தர் யாக்கோபுக்கு தயை கிடைக்க செய்தார். ஏசாவே எதிரிகொண்டு வந்து யாக்கோபை கட்டி அணைத்து முத்தம் செய்தார்.

பிரியமானவர்களே நாமும் நம்முடைய போராட்டமான, கடினமான சூழ்நிலைகளை கண்டு சோர்ந்து போய் விடாமல்  யாக்கோபை போல தேவனை விடாமல் பற்றி கொண்டு போராடி ஜெபித்தால் கர்த்தர் நம் காரியத்தை மாறுதலாய்  முடியப்பண்ணுவார். மலைபோல வருகிற பிரச்சினைகள் தேவனுடைய கரம் உங்களோடு இருக்கும் பொழுது பனிப்போல உருகிவிடும். கர்த்தரை மாத்திரம் விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்.

2. தேவனை விடாமல் பற்றிக்கொண்ட அன்னாள் 

தன்னுடைய வேண்டுதலுக்கு பதிலை பெற்றுக்கொண்டாள் 

I சாமுவேல் 1:10
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

I சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.

I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

I சாமுவேல் 1:18
அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

I சாமுவேல் 1:27
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

இங்கே அன்னாள் கர்த்தருடைய சமூகத்தில் மனம் கசந்து அழுது, வெகு நேரம் விண்ணப்பம் செய்கிறாள். என் சிறுமையை கண்ணோக்கி பார்த்து உம்முடைய அடியாளுக்கு ஒரு ஆன் பிள்ளையை கொடுத்தால் நான் அவனை கர்த்தருக்கு என்று ஒப்புக்கொடுப்பேன் என்று சொல்லி பொருத்தனை பண்ணி ஜெபம் செய்கிறாள். அன்னாள் தன் இருதயத்திலே பேசினால் அவளின் உதடு மாத்திரம் அசைந்தது இதை கவனித்து கொண்டு இருந்த ஆசாரியரான ஏலி நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் உன் குடியை உன்னை விட்டு விலக்கு என்கிறார் அதற்கு அன்னாள் ஆண்டவரே நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன் என்று சொன்னால் அதற்கு ஏலி நீ சமாதானத்தோடே போ நீ தேவனிடத்தில் கேட்ட உன்னுடைய விண்ணப்பத்தின் படி அவர் உனக்கு கட்டளையிடுவார் என்று சொல்லி அனுப்பினார் அதன் பின் அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை என்று நாம் வாசிக்கிறோம். 

அன்னாளை தன்னை மனமடிவாக்கும் படியான பேச்சுக்களை எல்லாம் சகித்து கொண்டு தேவன் எனக்கு நிச்சயம் ஒரு அற்புதம் செய்வார் என்று விசுவாசித்து கண்ணீரோடு கர்த்தரை விடாமல் பற்றிக்கொண்டு விண்ணப்பம் செய்தாள் அதன் படியே கர்த்தர் அன்னாளுக்கு கட்டளையிட்டார். தேவன் அந்நாளின் கொம்பை உயர்த்தி இருதயத்தை களிகூரும் படியாக செய்தார். அதுபோல உங்களுக்கும் தேவன் நிச்சயம் செய்வார் நீங்கள் அன்னாளை தேவனை விடாமல் பற்றிக்கொண்டு தேவ சமூகத்திலே தரித்திருங்கள் கர்த்தர் நிச்சயம் உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பார். 

3. தேவனை விடாமல் பற்றிக்கொண்ட யோபு 

இரட்டிப்பான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்

யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

யோபு 13:15
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.

யோபு 42:10
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

யோபு தன் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் இழந்த போதிலும் அவர் கர்த்தரை மறுதலிக்க வில்லை, தன்னுடைய பாடுகளின் மத்தியிலும் தேவனை விடாமல் பற்றிக்கொண்டாள் அவர் என்னை கொன்றுபோட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாய் இருப்பேன் என்று சொன்னார். தேவன் தனக்கு குறித்து இருக்கிறதை நிறைவேற்றுவார் என்றும் அவர் தன் வாழ்க்கையில் செய்ய நினைக்கும் காரியங்கள் ஒரு பொழுதும் தடை படாது என்று முழு நிச்சயமாய் நம்பி விசுவாசித்தார். கர்த்தரை மறுதலிக்கும் சூழ்நிலை வந்தாலும் யோபு மறுதலிக்கவில்லை. கர்த்தர் இதை கண்டார் யோபு தன் சிநேகிதர்களுக்காக வேண்டுதல் செய்த பொழுது அவர் யோபின் சிறையிருப்பை திருப்பி முன் இருந்த எல்லாவற்றை பார்க்கிலும் இரண்டத்தனையாய் ஆசீர்வதித்தார். நாமும் நம்முடைய பாடுகளில் மத்தியில், போராட்டமான சூழ்நிலைகளின் மத்தியில் யோபுவை போல தேவனை விடாமல் பற்றி கொண்டு இருப்போம் என்று சொன்னால் கர்த்தர் நம்மையும் இரட்டைபான நன்மைகளை கொடுத்து ஆசீர்வதிப்பார் என்பது அதிக நிச்சயம் அல்லவா

4. தேவனை விடாமல் பற்றிக்கொண்ட கானானிய ஸ்திரீ 

பெரிதான விசுவாசத்தினால் விரும்பின காரியத்தை பெற்றுக்கொண்டாள் 

மத்தேயு 15:22
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

மத்தேயு 15:23
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மத்தேயு 15:24
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

மத்தேயு 15:25
அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.

மத்தேயு 15:26
அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

மத்தேயு 15:27
அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

மத்தேயு 15:28
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

நீதிமொழிகள் 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

கானானிய ஸ்திரீ தன்னுடைய மகள் பிசாசின் பிடியில் அகப்பட்டு கொண்டு இருக்கிறாள் என்று இயேசுவினிடத்தில் வந்து தாவீதின் குமரானே எனக்கு இறங்கும் என்று வேண்டினாள் இயேசு அந்த ஸ்த்ரீக்கு மறு உத்தரவு வழங்க வில்லை அவருடைய சீஷர்களும் இந்த ஸ்திரீ நம்மை பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் என்றார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார் ஆனாலும் அந்த ஸ்திரீ சோர்ந்து போகாமல் இயேசுவை பணிந்து கொண்டு வேண்டினாள் அப்பொழுது இயேசு பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிக்கு போடுகிறது நல்லதல்ல என்கிறார் அதற்கு அந்த ஸ்திரீ  மெய்தான் ஆண்டவரே நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். அதற்கு இயேசு ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்கிறார். அப்பொழுதே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள் என்று வாசிக்கிறோம். நாமும் நம் ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் கொடுக்க வில்லையே என்று சோர்ந்து பொய் விடக்கூடாது இங்கே கானானிய ஸ்திரீ இயேசுவை விடாமல் பற்றி கொண்டு பெற்று கொண்டதை போல நீங்களும் இயேசுவை பற்றிக்கொள்ளுங்கள். உங்கள் விசுவாசத்தில் நிலைத்து நில்லுங்கள் நிச்சயம் ஒரு ஒரு நாள் தேவன் நீங்கள் விரும்பிய காரியத்தை உங்களுக்கு கட்டளையிடுவார். 

5. தேவனின் பாதத்தை விடாமல் பற்றிக்கொண்ட மரியாள் 

தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்துக்கொண்டாள் 

லூக்கா 10:38
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

லூக்கா 10:39
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.


லூக்கா 10:40
மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

லூக்கா 10:41
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக்கா 10:42
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

மத்தேயு 6:32
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்

மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

மாற்கு 8:36
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

சங்கீதம் 119:57
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

இயேசு பிரயாணமாய் போகையில் மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவருடைய வார்த்தைகளை கேட்டுக்கொண்டு இருந்தால் அனால் மார்த்தாலோ பற்பல வேளைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். அதனால் அவள் வருத்தமடைந்த இயேசுவினத்தில் வந்து நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். அதற்கு இயேசு பிரதியுத்தரமாக மார்த்தாளே நீ அநேக காரியங்களை குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய் ஆனால் மரியாளோ தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்துக்கொண்டாள் என்றார்.  ஆம் பிரியமானவர்களே  இயேசுவே நமக்கு பங்கும் சுதந்தரவீதமாய் இருக்கிறார். நாம் மார்த்தாளைப்போல இன்றைக்கு உலக காரியங்களிலே நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம். மரியாளை போல நாம் இருக்க வேண்டும் அவரை பாதத்தை விடாமல் பற்றிக்கொண்டு நித்திய ஜீவனாகிய நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னது தேவை என்பதை உங்கள் பரமபிதா அறிந்து இருக்கிறார். அவர் பார்த்து கொள்வார். முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் பின்னர் இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கபடும் என்று நாம் வேதத்திலே வாசிக்கிறோம். உலகம் முழுவதும் ஆத்யப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை இரட்சித்துக்கொள்ளாமல் போனால் அதனால் நமக்கு என்ன லாபம் ஆகவே மரியாளை போல தேவையான நல்ல பங்கை தெரிந்துகொள்வோம். 





Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment