Kanmalai Christian Church Christmas Service
Word of God: Brother Micheal
Date: 25.12.2021
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
கர்த்தத்துவம் என்றால் எல்லா வல்லமையும் கிறிஸ்து இயேசுவின் மேல வைக்கப்பட்டது தான் கர்த்தத்துவம் என்று சொல்லப்படுகிறது.
ஏசாயா 22:23
அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.
1. அதிசயமானவர் - பயங்கரமான காரியத்தை செய்வார்
மத்தேயு 1:18
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
மத்தேயு 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
மத்தேயு 21:15
அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
யாத்திராகமம் 34:10
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதிசயமாய் இந்த உலகத்திலே பரிசுத்த ஆவியினால் ஒரு கன்னிகையிடத்தில் பிறந்தார். அவர் இம்மானுவேலராய் இன்றும் நம்மோடு இருக்கிறார். அதிசயமானவர் சொல்லுகிறார் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயத்தை எல்லோருக்கும் முன்பாக உங்களுக்கு செய்வார் அவர் உங்களோடு இருந்து செய்கிற காரியம் பயங்கரமாய் இருக்கும்.
2. ஆலோசனைக்கர்த்தர் - மிகுந்த சந்தோஷம் உண்டாகும்
லூக்கா 2:10
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:11
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:12
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
சங்கீதம் 32:10
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
ஆலோசனை கர்த்தர் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கத்தக்கதான அடையாளத்தை செய்வார். உங்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும் பொருட்டு கிறிஸ்து இயேசு இன்றைக்கு பிறந்து இருக்கிறார். எந்த இடத்தில் கிறிஸ்து இயேசு இருக்கிறாரோ அந்த இடத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும். காரத்தரையே நாம் நம்பி இருக்கும் பொழுது அவர் கிருபை நம்மை சூழ்ந்து இருக்கும்.
3. வல்லமையுள்ள தேவன் - மகிமையானவைகளை செய்வார்
ஆதியாகமம் 3:14
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
ஆதியாகமம் 3:15
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
ஆதியாகமம் 3:16
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
லூக்கா 1:44
இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
லூக்கா 1:45
விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
லூக்கா 1:46
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
லூக்கா 1:47
என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
லூக்கா 1:48
அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
லூக்கா 1:49
வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
நாம் ஆராதிக்கிற தேவன் வல்லமையுள்ளவர் எலியா அன்றைக்கு கருத்தாய் ஜெபித்தார் வானத்தில் இருந்து அக்கினியை அனுப்பினார். எலியா மறுபடியும் கருத்தாய் ஜெபித்தார் ஏழாவது முறை மழையை பொழிய செய்தார். கையளவு மேகம் பெரு மழையை கொடுத்தது. வல்லமையுள்ள தேவன் திரும்பவும் வருவார் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்திலே கர்த்தராகிய தேவன் திருவுளம் பற்றினார். மரியாள் எலிசபெத்திடம் இவ்வாறாக சொல்லுகிறார் வல்லமையுள்ள தேவன் மகிமையானவைகளை எனக்கு செய்தார் என்று அதே போல் இன்றைக்கும் உங்களுக்கும் மகிமையான காரியங்களை செய்வார்.
4. நித்திய பிதா - நித்திய ஜீவனை அளிப்பார்
ஏசாயா 22:22
தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.
ஏசாயா 22:23
அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.
யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:17
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
கிறிஸ்து இயேசுவை பற்றி ஏசாயா தீர்க்கதரிசி மிக அழகாக எழுதி வைத்து இருக்கிறார். அவர் திறக்கவும் செய்வார், பூட்டவும் செய்வார், தாவீதின் திறவுகோல் அவர் தோலின் மேல் இருக்கும். அவர் தன் தகப்பன் வீட்டில் மகிமையான சிங்காசனமாக இருப்பார். அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் அவர் நாமம் நித்திய பிதா. நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தை இவ்வளவாய் அன்பு கூர்ந்தார். நமக்கு உறுதியான நிலையான இடம் எது வென்று சொன்னால் அது நிதியம் மாத்திரமே அதற்காகவே அவர் நித்திய பிதாவாக நம்மிடத்தில் வந்தார்.
5. சமாதானப்பிரபு - பாவ மன்னிப்பை அருளுவார்
ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
சமாதானத்தின் பிரபு எதற்கு அடையாளம் என்று சொன்னால் நாம் எல்லோரும் பாவ மன்னிப்பை எப்படி பெறுவது என்று சொல்லி ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ தம்முடைய ஆத்துமாவை நமக்காக ஒப்புக்கொடுத்து நம்மை மீட்டு கொண்டார் இன்று நமக்கு ஒரு நிச்சயம் உண்டு நாம் எல்லோரும் கிறிஸ்து இயேசு மூலமாக பரலோகம் போக முடியும் என்று ஆமென்.
For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment