Wednesday, December 15, 2021

வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள்

 

Kanmalai Christian Church

Word of God : Pastor Jachin Selvaraj 

(Apostolic Christian Assembly, Purasaiwalkam) 

Date: 12.12.2021


நியாயாதிபதிகள் 5:31

கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

கர்த்தர் நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் முக்கியப்படுத்த விரும்புகிற வார்த்தை என்ன வென்றால் நாம் ஒவ்வொருவரும் பிரகாசம் உள்ளவர்களாக, வல்லமையோடே உதிக்கின்ற சூரியனை போல இருக்க வேண்டும் என்பதை ஆண்டவர் விரும்புகிறார். 

மத்தேயு 5:16

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

கர்த்தர் நம்மிடையே எதிர்பார்க்கின்ற காரியம் என்னவென்றால் நம்முடைய வெளிச்சம் மற்றவர்களுக்கு முன்பதாக பிரகாசிக்க கடவது, நம்முடைய வாழ்க்கையானது இந்த உலகத்துக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதையே ஆண்டவர் விரும்புகிறார். 

ஆதியாகமம் 32:31

அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.

யாக்கோபு இரவெல்லாம் ஆண்டவரிடத்தில் போராடி ஜெயத்தை பெற்று கொண்டார், கர்த்தரிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தை வாங்கி விட்டார். அவருடைய வாழ்க்கையிலே சூரியன் உதித்து விட்டது, எந்த ஏசா விற்காக பயந்தாரோ அவரே வந்து யாக்கோபிடம் ஒப்புரவு ஆகும்படியாக கர்த்தர் மாற்றி விட்டார். 

ஏசாயா 60:1

எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

ஏசாயா 60:2

இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

ஏசாயா 60:3

உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.

யாத்திராகமம் 24:16

கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.

யாத்திராகமம் 24:17

மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.

எசேக்கியேல் 32:7

உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் பிரகாசிக்க வேண்டும் நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் வாஞ்சித்து நம்மை கர்த்தரிடத்தில் முழுவதுமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.நம்முடைய வல்லமையுள்ள சூரியன் உதிக்க வேண்டும் என்றால் 

மல்கியா 4:2

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

மல்கியா 4:3

துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தர் நம்முடைய வாழ்க்கையை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக வைப்பார். நமக்கு சத்துருக்களாக இருக்கிறவர்கள் ஒன்றும் இல்லாமல் போவார்கள். எப்பொழுது நாம் ஆண்டவருக்காக நின்றால், அவரை அதிகமாக தேடினால், அவரிடத்தில் அன்பு காட்டினால், அவருடைய வார்த்தையின் படி நடந்தால் அவ்வாறு நாம் செய்யும் பொழுது ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையை பிரகாசிக்கிற சூரியனைப்போல வைப்பார். 

II பேதுரு 2:2

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

II பேதுரு 2:3

பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

I யோவான் 2:8

மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

லூக்கா 8:43

அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,

லூக்கா 8:44

அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் பொழுது இருள் நம்மை விட்டு நீங்கி போகிறது, வாழ்விலும், தாழ்விலும் நான் உம்முடைய பிள்ளையாய் நிற்பீர்கள் என்று சொன்னால் உங்கள் இடத்தில் இருந்து இருள் விலகி போகிறது. 

புலம்பல் 3:43

தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.

புலம்பல் 3:4

ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

நாம் வாழ்க்கையிலே முன்னேற விடக்கூடாத படிக்கு ஒரு கார்மேகம் நம்மை மூடி விடுகிறது, ஆண்டவருக்கும், நமக்கும் ஆக இருக்கிற ஐக்கியத்தை தடைப்பண்ணுகிறது.  நிச்சயமாகவே ஆண்டவர் நமக்கு அற்புதத்தை செய்வார், அதிசயத்தை செய்வார். நாம் செய்ய வேண்டியது நம்மிடத்தில் என்ன குறைகள் இருக்கிறது, அதை எல்லாம் நீக்கி போடும் ஆண்டவரே என்று நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும். 

யாத்திராகமம் 16:14

பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது.

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு முன்னாடி அற்புதங்கள் நிற்கிறது ஆனால் அதை பார்க்ககூடாதபடிக்கு தடையாக  பனிக்கட்டிகள் படர்ந்து இருக்கிறது, கர்த்தர் நம்முடைய வாழ்க்கையிலும் சில பரீட்சைகளை வைப்பார். அதை நாம் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் நம் அதிசயத்தை பார்க்கக்கூடாத படி இருக்கிற பனிக்கட்டிகள் நீங்குவதற்கு நாம் வல்லமையுள்ள உதிக்கின்ற சூரியனாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவ்வாறு நாம் உதிக்கும் பொழுது பனி ஒன்றும் இல்லாமல் கரைந்து போகிறது.  

ஏசாயா 43:22

ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய்.

யோபு 6:24

எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

யோபு என்றாலே ஒரு சாட்சியின் ஜீவியம். சாட்சியுள்ளவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் என்ன விரும்புவார்கள் என்று சொன்னால் மற்றவர்களுடைய ஆலோசனையை எதிர்பார்ப்பார்கள், ஆனால் அவர் நண்பர்களோ யோபுவுக்கு சரியான ஆலோசனை வழங்கவில்லை ஆனாலும் யோபு அதையும் பொறுமையாய் கேட்டு கொண்டார் அதேபோலத்தான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் பிரகாசிக்க கூடாதபடிக்கு என்ன குறை இருக்கிறது என்பதை கர்த்தரிடத்தில் ஆலோசணை பெற்று கொண்டு நம்மை சீர்படுத்தி கொள்ள வேண்டும் 

மத்தேயு 26:21

அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 26:22

அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.

மத்தேயு 26:24

மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

இயேசு கிறிஸ்து தனக்கு வேதனை படுத்த போகிறவர்களையும் ஆறுதல்படுத்தினார், நீ தாம் எனக்கு துரோகியாய் நிற்கப்போகிறாய் என்பதை சொல்லவில்லை, நம்முடைய வாழ்க்கையிலே சத்துருக்கள் வருவார்கள் நாம் பிரகாசிக்க கூடாதபடிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வார்கள் ஆனால் அதை காட்டிலும் பெரியவர் நம்மோடு இருக்கிறார் அவரை நாம் உறுதியாய் பற்றிக்கொள்ளும் பொழுது தேவன் நிச்சயமாகவே நம்மை பிரகாசிக்கிற நட்சத்திரங்களாக வைப்பார். 




For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment