Kanmalai Christian Church
Sunday Service 8th November 2026
Word of God : Sis. Lydia Jachin
மத்தேயு 7:7
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;
1. கேளுங்கள் - கொடுக்கப்படும்
நாம் பெற்றுக்கொள்வோம் என்ற முழுநிச்சயத்தோடு தேவனிடத்தில் நம்பிக்கையோடு கேட்கக்கடவோம். நாம் நமது தேவைகளை பெற அநேக நேரங்களில் மனித உதவியை நோக்கியே செல்கின்றோம். நாம் முதலாக ஜெபத்தில் தேவனிடத்தில் தெரியப்படுத்துவோம் என்று சொன்னால் அவர் ஏற்ற வேளையில் நம் ஜெபத்தை கேட்டருள்வார்.
2. தேடுங்கள் - கண்டடைவீர்கள்
நாம் எப்பொழுதுமே எதையாவது நாம் பெற்று கொள்ள மாத்திரமே அவரை அநேக சமயங்களில் தேடுகிறோம். கர்த்தரை கண்டடைய தக்க சமயத்தில் அவரை தேடுங்கள் அவர் சமூகக்த்தை நித்தமும் நாடுங்கள், தாவீது இப்படியாய் சொல்கிறார் ஒன்றையே கேட்பேன் அதையே நாடுவேன், கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி இருப்பதையே நாடுவேன் என்று, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். நீங்கள் தேடினீர்கள் என்றால் கண்டடைவீர்கள். அப்பொழுது தேவன் உங்களை குறித்த தமது சித்தத்தை உங்களுக்கு தெரியப்படுத்துவார்
3. தட்டுங்கள் - திறக்கப்படும்
மூடிய கதவுகளுக்கு முன்பாக நிற்பது போன்ற சூழ்நிலைகளில், விடா முயற்சியோடு தேவனை தேட வேண்டும். சில சூழ்நிலைகள் நம்மை சோர்வடைய செய்யலாம், பல தடைகள் வந்தாலும் சோர்ந்து போகாமல் உறுதியோடு, கர்த்தரின் நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்.
தேவன் நமக்கு, செய்வி சாய்க்கவும், நன்மைகளை அளிக்கவும் சித்தமாய் இருக்கிறார் என்ற உறுதியை இந்த வசனம் நமக்கு அளிக்கிறது. நம்பிக்கையை தேவன் பேரில் வைக்கும் பொழுது அவர் நிச்சயம் நம் வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்வார்.
Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:
Post a Comment