Kanmalai Christian Church
Sunday Service 12th July 2026
Word of God : Sis. Lydia
சங்கீதம் 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
1. உலையான சேற்றில் இருந்து கை தூக்கிவிடுவார்
சங்கீதம் 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
நாம் எப்படிப்பட்ட பாவத்தில் விழுந்து இருந்தாலும், அவைகளில் இருந்து எப்படி வெளியே வருவது என்று நாம் திகைத்து கொண்டு இருந்தாலும் சரி, தேவன் நம்மை கைதூக்கி எடுப்பார்.
நாம் பாவங்களை அறிக்கையிட்டு ஆண்டவரை நோக்கி கூப்பிடும் பொழுது, அவர் நம்மை தூக்கியெடுக்க உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
2. குழியிலுருந்து கை தூக்கிவிடுவார்
ஆதியாகமம் 37:28
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
யாக்கோபு 4:10
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
நாம் கர்த்தருக்கு முன்பதாக நம்மை தாழ்த்தும் பொழுது நம்மை தூக்கியெடுக்கவும், உயர்த்தவும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். கர்த்தருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் ஏற்ற வேலை வரும் பொழுது அவர் உங்களை உயர்த்துவார். அவர் நேரம் வரும் வரையில் ஒன்றுக்கும் கவலைப்படாமல் தேவனுக்கு தெரியப்படுத்தி ஜெபத்தோடு காத்திருக்க வேண்டும்
I பேதுரு 5:6
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
யோசேப்பை குழியிலுந்து தூக்கி ஏற்ற வேலை வந்த பொழுது கர்த்தர் யோசேப்பை தேசத்திற்கே அதிபதியாக வைத்தார்.
3. கெபியிலிருந்து கை தூக்கிவிடுவார்
தானியேல் 6:23
அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.
தானியேலை சிங்கத்தின் கெபியிலுருந்து தூக்கி விட்டார் அவர் இடைவிடாமல் ஆராதித்தார், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர் ஜெபிப்பதை நிறுத்தவில்லை தேவனுக்கு முன்பதாக தன்னை குற்றமற்றவராக காத்துக்கொண்டார். அதனாலே தானே தேவன் சிங்கத்தின் வாய்க்கு தப்புவித்தார். கட்டளையிட்ட ராஜாவின் மூலமாகவே கெபியிலுருந்து தூக்கிவிடும்படியாக தேவன் தானியேலின் வாழ்க்கையில் செய்தார் நீங்கள் கர்த்தருக்காக அவருடைய நேரத்திற்காக காத்திருக்கும் பொழுது தேவன் ஏற்ற வேளையில் உங்களை உயர்த்த வல்லவராய் இருக்கிறார். அவர் உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்தி உங்கள் அடிகளை உறுதிப்படுத்துவார்.
Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:
Post a Comment