Kanmalai Christian Church
Sunday Service 15th March 2026
Word of God : Sis . Lydia
யோவேல் 2:12
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நாம் நம்முடைய உபவாச நாட்களில் கர்த்தரிடத்தில் நம்முடைய அழுகையோடும் புலம்பலோடும், முழு இருதயத்தோடும் திரும்ப வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். வெறும் பெயரளவில் உபவாசம் இருக்கிறோம் என்று அல்லாமல் கர்த்தரை தேடுவதை நாம் நம்முடைய இருதயத்தை செலுத்த வேண்டும். அப்பொழுது தேவன் நம்மை கண்ணோக்கி பார்த்து நமக்கு வேண்டியபடியெல்லாம் செய்வார்.
சங்கீதம் 69:10
என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.
கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற உகந்த உபவாசம்
ஏசாயா 58:6
அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,
ஏசாயா 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
அப்போஸ்தலர் 13:2
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 13:3
அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
எஸ்றா 8:23
அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
எஸ்தர் 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:
Post a Comment