Tuesday, October 14, 2025

தேவ சாயலாக மாறுவோம்

Kanmalai Christian Church
Word of God : Sis. Lydia 
Date : 12.10.2025

ரோமர் 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ரோமர் 8:29
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

ஆதியாகமம் 1:27
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

அவருடைய தீர்மானத்தின் படி அழைக்கப்பட்டவர்களாகிய தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நனமைக்கு ஏதுவாக நடக்கும். கர்த்தருடைய பார்வையில் நாம் முதற்பேறானவர்களாக இருக்கிறோம். அவர் நம்மை தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருக்கும்படி முன்குறித்து இருக்கிறார். நாம் நம்முடைய நடக்கையில் எல்லாவற்றிலும் இயேசுவைபோல நாம் மாற வேண்டும். அவருடைய சாயலாக நாம் மாற நாம் வாஞ்சிக்க வேண்டும். நம் செயல்கள் எல்லாவற்றிலும் இயேசு வெளிப்பட நாம் வாஞ்சிக்க வேண்டும். அவருடைய வெளிச்சம் நம்மில் பிரகாசிக்கும் படியாக நம் ஜீவியம் இருக்க வேண்டும். 

கலாத்தியர் 5:24
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

பிலிப்பியர் 2:6
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

பிலிப்பியர் 2:7
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

இயேசு கிறிஸ்து எல்லாவற்றிலும் நமக்கு ஒரு முன் மாதிரியாக இருந்து இருக்கிறார். நாம் இயேசுவை போல ஒவ்வொரு செயலிலும் நம்மை பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்துவை உடையவர்களாக நாம் இருக்க வேண்டும். இயேசு தம்மை தாம் தாழ்த்தியது போல நாமும் நம் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்.அவ்வாறு நாம் நாடாகும் பொழுது சகலமும் நமக்கு நன்மைக்கு ஏதுவாக நடக்கும். தேவன் நம்மை உயர்த்துவார். 







Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment