Kanmalai Christian Church
Word of God : Pas. Jason Abhraham
Date : 07.09.2025
I சாமுவேல் 30:8
தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.
நீங்கள் சகலத்தையும் திருப்பி கொள்வீர்கள். இழந்து போன மதிப்பு, இழந்து போன கனம், இழந்து போன பரிசுத்தம், இழந்து போன அபிஷேகம், இழந்து போன சமாதானம், இழந்து போன சுகம், இழந்து போன ஆசீர்வாதம் என நீங்கள் சகலத்தையும் திருப்பி கொள்வீர்கள். எந்த வித இழப்பின் மத்தியில் நீங்கள் கடந்து சென்று கொண்டு இருந்தாலும் சரி இன்றைக்கு ஆவியானவர் சொல்லுகிறார். நீங்கள் சகலத்தையும் திருப்பி கொள்வாய்.
சிக்லாகுக்கு என்ற என்ற வார்த்தையின் அர்த்தம் கரும்பு சாறு போன்று பிழிந்த நிலைமை அன்றைக்கு தாவீதுக்கு நேர்ந்தது, எல்லா பக்கங்களிலும் இருந்தும் ஒரு நெருக்கடி இன்றைக்கு சிக்லாக்கை போல உங்கள் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறதோ இந்த சிக்லாக்கின் சிறையிருப்பை மாற்ற கர்த்தர் வல்லவராய் இருக்கிறார்.
I சாமுவேல் 30:4
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
I சாமுவேல் 30:5
தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
வேதத்தில் தேவன் ஒரு பெயரை குறிப்பிடுகிறார் என்றால் ஒரு காரணம் இருக்கிறது. இங்கே தாவீதின் மனைவியாகிய அகினோ என்ற பெயருக்கு கிருபை என்று அர்த்தம். அபிகாயிலுக்கு ஆதாரம் என்று அர்த்தம். இங்கே தாவீது தன் கிருபையையும், ஆதாரத்தையும் இழந்து போன ஒரு நிலைமை ஆனாலும் தாவீது கர்த்தருக்கு உள்ளாக தன்னை திடப்படுத்தி கொண்டான். எவ்வளவு பெரிய சிறையிருப்பாய் இருந்தாலும் சரி உன்னதமான தேவனின் நாமத்தை நீ தரித்து கொண்டு இருப்பாய் என்று சொன்னால் கர்த்தர் உன் எல்லா சிறையிருப்பையும் நீக்கி விடுதலை தருவார்.
I சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
கர்த்தர் என்னை கைவிடமாட்டார், நான் எக்காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன், என் தகப்பன், என் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் என்னை சேர்த்து கொள்ளவார். என்று நீங்கள் தேவனுக்கு முன்பாக விசுவாச அறிக்கை செய்தால் கர்த்தர் உங்கள் எல்லா சூழ்நிலையில் இருந்து விடுவிக்க வல்லவராய் இருக்கிறார்.
ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
சிறையிருப்பில் விடுதலை நமக்கு எப்படி உண்டாகும் ?
யாத்திராகமம் 17:12
மோசேயின் கைகள் அசர்ந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
யாத்திராகமம் 17:13
யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
மோசே என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஜலத்தில் இருந்து அவனை எடுத்ததால் மோசே என்று பெயர் வைத்தார்கள் . ஊர் என்று சொன்னால் அபிஷேகம் என்று பொருள். ஆரோன் என்று சொன்னால் பாதிப்பு என்று பொருள். இங்கே மோசே கைகளை உயர்த்தி பிடுத்து தாங்க ஊர் என்னும் அபிஷேகம், ஆரோன் என்னும் கர்த்தருடைய போதனை அவனுடன் இருந்ததால் கைகளை வானத்திற்கு நேராக உயர்த்தும் பொழுது அமெலேக்கியரை மேற்கொண்டான். அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நெருக்கத்தின் சூழ்நிலைகளை பற்றி பாராமல் அபிஷேகத்திலும், கர்த்தருடைய போதனையிலும் நாம் நிலைத்திருப்போம் என்று சொன்னால் கர்த்தர் நம் சிறையிருப்பை மாற்றி நமக்கு விடுதலை அளிக்க வல்லவராய் இருக்கிறார். நாம் கைகளை உயர்த்தி ஜெபிக்கும் பொழுது, பிறருக்காக நாம் ஜெபிக்கும் பொழுது கர்த்தர் நம்முடைய சிறையிருப்பை நிச்சயம் மாற்றுவார். யோபுவின் சிறையிருப்பை மாற்றியது போல உங்களின் சிறையிருப்பையும் கர்த்தர் மாற்றுவார்.
Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment