Sunday, June 23, 2024

நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்

 

Kanmalai Christian Church

Word of God : Pas. Micheal

Date: 23.06.2024

I கொரிந்தியர் 13:10
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

1. நிறைவான பலனை அளிப்பார் 

ரூத் 2:11
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.

ரூத் 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

2. நிறைவான சந்தோஷத்தை அளிப்பார் 

II யோவான் 1:12
உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.

I யோவான் 1:4
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.

3. நிறைவான ஆகாரத்தை அளிப்பார் 

மத்தேயு 14:20
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.

4.  நிறைவான மகிமையை அளிப்பார் 

பிலிப்பியர் 4:19
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

5. நிறைவான விசுவாசத்தை அளிப்பார் 

I தெசலோனிக்கேயர் 3:10
உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.






Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment