Monday, October 17, 2022

கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்

 

Kanmalai Christian Church

Word of God: Pastor Micheal

Date: 16.10.2022

சங்கீதம் 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்

சங்கீதம் 44:21
தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.

சங்கீதம் 139:4
என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

நம் தேவன் எல்லாவற்றையும் வெளியரங்கமாய் அறிந்து இருக்கிறார். நம்முடைய நினைவுகளை எல்லாம் அவர் அறிந்து இருக்கிறார். நம்முடைய இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்து இருக்கிறார். நம்முடைய நாவுகளில் சொல் பிரவாததற்கு முன்னமே தேவன் அதை அறிந்து வைத்து இருக்கிறார். நம்மை ஆராய்ந்து அறிந்து இருக்கிற கர்த்தர் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் எவைகளை எல்லாம் அறிந்து இருக்கிறார் என்பதனை ஒரு ஐந்து விதமான காரியங்களில் நாம் இங்கே தியானிக்கலாம். 

1. நம் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார் 

நம்மை உயர்த்தும்படியாக 

சங்கீதம் 31:1
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

சங்கீதம் 31:2
வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

சங்கீதம் 31:3
உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.

ஆதியாகமம் 37:23
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,

ஆதியாகமம் 37:24
அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.

ஆதியாகமம் 37:25
பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.
 
ஆதியாகமம் 37:28
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.

ஆதியாகமம் 42:20
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:

ஆதியாகமம் 42:21
நம்முடைய சகோதர னுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.

நம் தேவனாகிய கர்த்தர் நாம் படுகிற உபத்திரவங்களை எல்லாம் பார்க்கவே பார்த்து நம் ஆத்தும வியாகுலங்களை எல்லாம் அறிந்து இருக்கிறார். யோசேப்பை அவனுடைய சொந்த சகோதரர்களே பொறாமையினால் பலவர்ண அங்கியை கழற்றி அவனை குழியிலே போட்டார்கள். அது தண்ணீர் எதுவும் இல்லாத வெறும் குழியாய் இருந்தது. அனால் அவர்கள் சகோதரர்களோ போஜனம் செய்ய உட்கார்ந்தார்கள். கர்த்தர் யோசேப்பின் வியாகுலத்தை கண்ணோக்கி பார்த்தார் கிலயாத்தில் இருந்து இஸ்மவேலருடைய கூட்டம் கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஏற்றி கொண்டு எகிப்துக்கு போகும்படியாக வந்தது. அவர்கள் கண்கள் காணும்படியாக அவர்கள் வந்தார்கள் அவர்கள் யோசேப்பை அவர்களிடத்தில் விற்றுப்போட்டார்கள். தேவனே யோசேப்பை குழியில் இருந்து தூக்கி எகிப்துக்கு போகுபடியாக செய்தார். எந்த சகோதரர்கள் தன்னை குழியிலே தள்ளினார்களோ அவர்கள் கண் முன்னே தேவன் யோசேப்பை உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும்படியாக வைத்தார். அதே போல உங்கள் வியாகுலங்களையும் கர்த்தர் அறிந்து வைத்து இருக்கிறார் எனவே சோர்ந்து போக வேண்டாம்  ஏற்ற வேலையானது வரும் பொழுது கர்த்தர் உங்களை நிச்சயமாக உயர்த்துவார். 

2. நம் வேதனைகளை எல்லாம் அறிந்து இருக்கிறார் 

ஒடுக்கினவர்களின் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்கும்படியாக 

யாத்திராகமம் 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

யாத்திராகமம் 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.

கர்த்தர் தம்முடைய ஜனங்கள் எகிப்திலே ஆளோட்டிகள் நிமித்தமாக அவர்கள் உபத்திரவத்தை பார்த்தேன், அவர்கள் கூக்குரலை கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளை எல்லாம் அறிந்து இருக்கிறேன் அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கி பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய் சேர்க்கும்படியாக இறங்கினேன் என்று மோசேயிடம் கூறினார். ஆம் பிரியமானவர்களே தேவன் நம் வேதனைகள், உபத்திரவங்களை எல்லாம் அறிந்து இருக்கிறார், நாம் அவரை நோக்கி இடுகின்ற கூக்குரல் அவருக்கு தெரியும் தேவன் நமக்காக இறங்கி வருவார் நம்மை ஆளோட்டிகள் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்க அவர் இறங்கி வருவார், அவர் நம்மை நிச்சயம் ஒரு நாள் நலமும் விசாலமும் ஆன இடத்திலே கொண்டு பொய் சேர்ப்பார். 

3. நம் நிந்தைகள், அவமானம், வெட்கத்தை அறிந்து இருக்கிறார் 

உன் பேரை பெருமைப்படுத்தும்படியாக 

சங்கீதம் 69:13
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

சங்கீதம் 69:16
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

சங்கீதம் 69:19
தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.

நம்முடைய நிந்தையை மாற்ற கர்த்தரால் முடியும். நம் வெட்கத்தை களிப்பாய் மாற்ற அவரால் முடியும். எந்த இடத்திலே நீங்கள் அவமானப்பட்டீர்களோ அதே இடத்திலே உங்களை தூக்கி உயர்த்த கர்த்தரால் முடியும். இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்தவராய் எல்லா நிந்தைம், அவமானம், வெட்கத்தை நமக்காக ஏற்றுக்கொண்டார். பிதாவானவர் எல்லா நாமத்திற்கு மேலான நாமத்தை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு அளித்து உயர்த்தினார். நம்முடைய வாழ்க்கையிலும் வரும் நிந்தனைகள், அவமானங்கள், வெட்ககங்களை சகிப்போம் என்று சொன்னால் தேவன் நிச்சயமாய் உங்கள் பெயரை பெருமைப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பார்.  

4. நம் பாதைகளை எல்லாம் அறிந்து இருக்கிறார் 

நீதியின் பாதியிலே நம்மை நடத்தும்படியாக 

சங்கீதம் 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

சங்கீதம் 142:2
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

சங்கீதம் 142:3
என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.

சங்கீதம் 23:3
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் கர்த்தர் நம் பாதைகளை உற்று நோக்குகிறவராய் இருக்கிறார். நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் அநேகமாய் இருந்தாலும் கர்த்தர் அவைகளில் இருந்து அவர்களுக்கு விடுதலை அளிக்கிறார். உங்கள் வாழ்க்கையிலே பல தடைகள் வரலாம், போராட்டங்கள் வரலாம், சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருக்கலாம், அவர் உங்கள் ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையில் உங்களை வழிநடத்த வல்லவராய் இருக்கிறார். 

5. நம் புத்தியீனங்களை எல்லாம் அறிந்து இருக்கிறார் 

பாவத்தை மன்னித்து இரக்கம் செய்யும்படியாக

 சங்கீதம் 69:5
தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

எண்ணாகமம் 12:11
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.

சில நேரங்களில் புத்தியீனமாய் நாம் சில காரியங்களை செய்கிறோம். ஆனாலும் கர்த்தர் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார். நாம் புத்தியீனமாய் நாம் நடக்கும் பொழுது நாம் ஆண்டவரிடத்தில் மன்றாடி மன்னிப்பு கேட்கும் பொழுது நம்முடைய பாவங்களை தேவன் மன்னிக்கிறவராய் இருக்கிறார். 







Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment