Sunday, April 17, 2022

மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்

 

Kanmalai Christian Church

Easter Sunday Service

Word of God : Brother Micheal

Date: 17.04.2022

ரோமர் 1:5
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் பலமாய் ரூபிக்கப்பட்ட தேவ குமாரனுமாய் இருக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் மீண்டுமாய் உயிர்த்தெழுகிறார். இன்றைக்கு உயிர்த்தெழுந்த ஆண்டவர் ஒரு ஐந்து விதமான கேள்விகளை கேட்டு நமக்கு செய்யப்போகிற நன்மையான காரியங்களை நாம் இங்கே தியானிக்கலாம். 

1. துக்கமுகமாய் வழிநடந்து பேசி கொண்டு வருகிற காரியம் என்ன ? 

இருதயங்களை கொழுந்து விட்டு எறியப்பண்ணுவார் 

லூக்கா 24:15
இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்.

லூக்கா 24:17
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.

எஸ்தர் 9:1
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

லூக்கா 24:32
அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,

உயிர்த்தெழுந்த ஆண்டவர் நம்மோடு நடந்து வருகிறவராக இருக்கிறார். சீஷர்கள் துக்கமுகமாய் வழி நடந்து கொண்டு ஒருவருக்கொருவர் பேசி கொண்டு இருக்கிற காரியங்கள் என்ன என்று உயிர்த்தெழுந்த இயேசு அவர்களை பார்த்து கேட்டார். நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்கள், கண்ணீர்கள், தத்தளிப்பு, தவிப்பு, தனிமைகள் பல காரியங்கள் நம்முடன் வருவதை நாம் அடிக்கடி அவைகளையே ஒருவருக்கொருவர் பேசி கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு ஆண்டவர் நீங்கள் அவ்வாறு துக்கமுகமாய் பேசி கொண்டு இருக்கிற காரியம் என்ன என்று கர்த்தர் கேட்கிறார். நாம் துக்கமாய் இருப்பது ஆண்டவர் சித்தமே அல்ல நாம் எப்போதும் துக்கமாய் இருக்க வேண்டும் என்பதே பிசாசானவனின் நோக்கமாய் உள்ளது உங்கள் காரியம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம், சோர்ந்து போக வேண்டாம், நீங்கள் துக்கமுகமாய் நினைத்து கொண்டு இருக்கிற காரியங்களை கர்த்தர் மாறுதலாய் முடியப்பண்ணுவார். கர்த்தர் மேல் அவருடைய வார்த்தை மேல் மாத்திரம் நம்பிக்கை வையுங்கள் அவர் உங்கள் இருதயங்களை கொழுந்து விட்டு எறியப்பண்ணுவார்.= (adsbygoogle = window.adsbygoogle || []).push({});  
2. உங்கள் இருதயத்தில் சந்தேகங்கள் எழும்புகிறது என்ன ?

 தம்முடைய கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பார் 
லூக்கா 24:38
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

லூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

லூக்கா 24:51
அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

சீஷர்கள் பேசி கொண்டு இருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவில் தோன்றி உங்களுக்கு சமாதானம் என்கிறார். ஆனால் சீஷர்களோ ஒரு ஆவியை கண்டது போல கலங்கினார்கள். உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறது என்ன என்று இயேசு கேட்கிறார். மேலும் இயேசு நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், கால்களையும் தொட்டுப்பாருங்கள். சந்தேகப்பட்ட சீஷர்களை இயேசு பெத்தானிய வரை அழைத்துக்கொண்டு போய் கையை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். அவர் நமக்காக சாபமானதால் நாம் ஆசீர்வாதமாக மாற்றப்பட்டோம். நீங்கள் சந்தேகப்பட்டு கலங்க வேண்டாம் கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பார். 

3. ஏன் அழுது கொண்டு இருக்கிறாய் ?

கர்த்தர் பரிசுத்த ஆவியை அருளுவார் 

யோவான் 20:13
அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

யோவான் 20:15
இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

யோவான் 20:16
இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

யோவான் 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

யோவான் 20:22
அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;

யோவான் 20:23
எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

ஆண்டவர் இயேசு இருக்கிறதை அறியாமல் அழுது கொண்டு இருந்தாள். இயேசு ஸ்திரீயே ஏன் அழுகிறாய்  என்றார். என் ஆண்டவரை எடுத்து கொண்டு போய் விட்டார்கள், அவர் வாய்த்த இடம் எனக்கு தெரியவில்லை என்றாள். நீ போய் என் சகோதரிகளிடம் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனா மரியாள் கர்த்தரை கண்டதையும் அவர் தன்னுடைய சொன்னதையும் சீஷர்களுக்கு அறிவித்தாள். இயேசு அவர்கள் நடுவில் தோன்றி உங்களுக்கு சமாதானம் என்று சொல்லி என் பிதா என்னை அனுப்பினதை நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். இன்றைக்கும் அழுது கொண்டு இருக்கிற உங்களுக்கு கர்த்தர் சமாதானத்தை அளித்து பரிசுத்த ஆவியை அருளுகிறார். 

4. பிள்ளைகளே ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா?

வரங்களை அளித்து திருப்தியாக்குவார் 

யோவான் 21:3
சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

யோவான் 21:5
இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

யோவான் 21:6
அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.

யோவான் 21:7
ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.

யோவான் 21:9
அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.

யோவான் 21:11
சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு இனி வரப்போவதில்லை என்று எண்ணி நான் மீன் பிடிக்க போகிறேன் என்றான் அவர்கள் நாங்களும் உங்களுடன் வருகிறோம் என்று போனார்கள் ஆனால் அவர்கள் அந்த இரவு முழுவதும் ஒன்றுமே பிடிக்கவில்லை. இயேசு கரையிலே நின்றார் சீஷர்கள் அவர் இயேசு என்பதை அறியாது இருந்தார்கள். பின் இயேசு வலையை படகுக்கு வலதுபுறம் போடுங்கள் என்றார். அப்பொழுது திரளான மீன்கள் அவர்களுக்கு அகப்பட்டது இதை கண்ட இயேசுவுக்கு அன்பாய் இருந்த சீஷன் பேதுருவிடம் அவர் கர்த்தர் என்று சொன்னான் இதை கேட்டவுடனே பேதுரு தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். நம்முடைய வாழ்க்கையிலும் இயேசு இல்லை என்று சொன்னால் நாம் எவ்வளவு தான் பிரயாசம் எடுத்தாலும் அது விருதாவாக தான் இருக்கும். நீங்கள் பின்மாற்றமாய் போனாலும் உங்களை தேடி இயேசு வருவார் கரையில் வந்து உங்களுக்காக இருப்பார். நீங்கள் கர்த்தரை விட்டு தூரம் போனாலும் கர்த்தர் பேதுருவை போல பயன்படுத்தினது போல உங்களையும் பயன்படுத்துவார். 

5. அவர்களை கலிலேயாவுக்குப் போக சொல்லுங்கள் ?

அவர் உங்களுக்கு வானத்துக்கும், பூமிக்கும் அதிகாரம் கொடுப்பார் 

மத்தேயு 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

மத்தேயு 28:16
பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.

மத்தேயு 28:18
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

இயேசு சீஷர்களை கலிலேயாவுக்குப் போகும் படி சொன்னார். சீஷர்களும் இயேசு கலிலேயாவிலே சொன்ன தங்களுக்கு குறித்திருந்த மலைக்கு வந்து அவரை பணிந்து கொண்டார்கள். அப்பொழுது இயேசு அவர்கள் சமீபமாய் வந்து வானத்துக்கும், பூமிக்கும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது எனவே நீங்கள் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் நான் உங்களுக்கு சொன்ன யாவற்றையும் குறித்து அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். உலகத்தின் முடிவுப்பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று சொன்னார். ஆம் பிரியமானவர்களே இன்றைக்கும் உயிர்த்தெழுந்த இயேசு நம்முடன் இருக்கிறார், அவர் சித்தத்தை செய்ய உங்களுக்கு அதிகாரம் கொடுத்து இருக்கிறார். கர்த்தர் சதா காலங்களிலும் உங்களுடனே கூட இருக்கிறார். 



For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment