Monday, March 29, 2021

அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே

 

Kanmalai Christian Church

Word of God : Brother Micheal

Date : 28.03.2021



எபிரெயர் 11:16
அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

கர்த்தர் நமக்காக ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணுகிறார். இந்த நகரமானது புதிய எருசலேம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த புதிய எருசலேம் ஆனது பரலோகத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வருகிறதை யோவான் காண்கிறார். நமக்காக தேவன் ஆயத்தம் பண்ணின நகரம். அந்த நகரம் பரிசுத்த நகரம் ஆக இருக்கிறது. 

நமக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நகரம் எப்படி இருக்கும் ?

வெளி 21:2
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 

எபிரெயர் 11:10
ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.


எபிரெயர் 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.

எபிரெயர் 11:12
ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.

எபிரெயர் 11:13
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

தேவன் தாமே இந்த பரிசுத்த நகரத்தை கட்டுகிறார். யாருக்காக என்றால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை முழு நிச்சயத்தோடு நம்பி விசுவாசத்தோடு மரித்த அந்நியர்களுக்கும், பரதேசிகளுக்கும் கர்த்தர் தாமே இந்த நகரத்தை ஆயத்தப்படுத்துகிறார். 


வெளி 21:16
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.

வெளி 21:17
அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.

வெளி 21:18
அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.


புதிய எருசலேம் நகரம் சதுரமாய் இருக்கிறது. புதிய எருசலேமின் நீளமும், அகலமும் சமமாய் இருக்கிறது. இந்த பரிசுத்த நகரத்தின் மதிலை தூதன் அளந்து பார்க்கும் பொழுது நூற்றுநாற்பத்துநான்கு முழமாய் இருந்தது. நகரத்தின் மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. 

வெளி 21:12
அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

வெளி 21:13
வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

தேவன் நமக்காக ஆயத்தம் பண்ணின பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேமில் மொத்தம் பனிரெண்டு வாசல்கள் உள்ளது. அந்த பனிரெண்டு வாசல்களிலும் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்கள் இடப்பட்டிருந்தது.  


வெளி 21:19
நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

வெளி 21:20
ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.

வெளி 21:14
நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

வெளி 21:21
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.


 புதிய எருசலேமின் மதிலுக்கு பனிரெண்டு அஸ்திபாரக்கற்கள் இருக்கிறது. அதின் அஸ்திபாரங்கள் சகலவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவைகள் மேல் இயேசு கிறிஸ்துவினுடைய பனிரெண்டு அப்போஸ்தலர்களின் நாமங்கள் இருக்கிறது. பனிரெண்டு வாசல்களும் பனிரெண்டு முத்துக்களாய் இருந்தது. ஒவ்வொரு வாசலுக்கும் ஒரு முத்து இருக்கிறது. பரிசுத்த நகரத்தின் வீதி முழுவதும் சுத்த பொன்னால் செய்யப்பட்டுஇருந்தது.

வெளி 22:2
நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

வெளி 21:23
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

வெளி 21:4
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேமில் ஒரு நதி இருக்கிறது. நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, இந்த ஜீவவிருட்சம் பனிரெண்டு விதமான கனியை தருகிறது, மாதம் ஒரு கனியை தருகிறது. அந்த ஜீவவிருட்சத்தின் இலைகள் ஆரோக்கியத்திற்கு ஏதுவானவைகளாக இருக்கின்றன. வியாதி என்பதே அங்கே கிடையாது. அது மட்டும் அல்லாமல் புதிய எருசலேமிற்கு வெளிச்சம் கொடுக்க சூரியனும், சந்திரனும் தேவையில்லை மகிமை பொருந்திய ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்காய் இருக்கிறார். தேவன் நமக்காக இப்படிப்பட்ட அருப்புதமான நகரத்தை ஆயத்தம் பண்ணி வைத்து இருக்கிறார். இந்த நகரத்தில் தேவன் நம்மை கூட்டி சேர்த்து நம்முடைய கண்ணீர் யாவையும் துடைக்கிறார் இங்கே மரணம் இல்லை, துக்கம் இல்லை, அலறுதல் இல்லை வருத்தமும் இல்லை. இந்த பரிசுத்த நகரம் தன்னுடைய மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியை போல நேர்த்தியாய் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. நமக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நகரம் நாம் அதை சுதந்தரிக்க வாஞ்சிப்போம். விசுவாசத்தோடு அனைத்துக்கொள்வோம். 





For Contact:
Kanmalai Christian Church
Bother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment