கன்மலை கிறிஸ்துவ சபை ஏப்ரல் மாத வாக்குத்தத்தம்
Word of God: Brother Micheal
Date: 01.04.2020
தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்
ஏசாயா 25:8
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
1. உங்கள் மேல் சுமத்தின சுமைகளை நீக்குவார்
யாத்திராகமம் 6:6
ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஓங்கிய புயத்தினால் உங்களை மகா தண்டனையில் இருந்து மீட்டு கொள்வார்.
2. உங்கள் எல்லா நெருக்கத்தையும் நீக்குவார்
சங்கீதம் 54:7
அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
சத்துருவின் நீதியை சரிக்கட்டுவார்
3. உங்கள் தத்தளிப்பின் பாத்திரத்தை நீக்கிப்போடுவார்
ஏசாயா 51:22
கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.
உங்கள் சார்பில் கர்த்தர் வழக்காடுவார்
4. உங்கள் அசுத்தங்கள், நரகலான விக்கிரகங்களை நீக்குவார்
எசேக்கியேல் 36:23
புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 36:24
நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.
எசேக்கியேல் 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை சுத்திகரித்து பரிசுத்தமாக்குவார்
5. உங்கள் நோய்களை நீக்குவார்
மத்தேயு 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
இயேசு உங்கள் சகல நோய்களையும் நீக்கி சொஸ்தமாக்குவார்
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment