Tuesday, January 21, 2020

நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்


கன்மலை கிறிஸ்துவ சபை 
Word of God : Brother Micheal
Date : 19.01.2019


I கொரிந்தியர் 1:26
எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அழைப்பு இருக்கிறது.  அநேகர் இந்த உலகில் வல்லவர்களாக இருந்த போதிலும் ஆண்டவர் நம்மை அழைத்து இருக்கிறாரே அதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இங்கே மூன்று விதமான தகுதிகளை நமக்கு இல்லாவிட்டாலும் ஆண்டவர் நம்மை அழைத்து இருக்கிறார். அந்த அழைப்பை நீங்கள் பாருங்கள். 

I கொரிந்தியர் 1:27
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;

பைத்தியமான நம்மை தெரிந்து கொண்டார் எதற்காக ? ஞானிகளை வெட்கப்படுத்தும் படியாக, அவருடைய நாமம் மகிமைப்படும்படியாக எதற்கும் தகுதி இல்லாத நம்மை தேவன் தெரிந்து கொண்டார். நமக்கு தெரியாத காரியத்தை தேவ ஞானத்தை கொண்டு அதை செய்யும் படிக்கு நம்மை பயன் படுத்துவார்.  

I கொரிந்தியர் 1:27
பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

செல்வ பலமும் இல்லை, உடல் பலமும் இல்லாத நம்மை இந்த உலகத்தில் உள்ள பலமானவைகளை வெட்கப்படுத்தும்படியாக தெரிந்து கொண்டார். வேதத்தில் நம்மை தாவீதை பார்க்கும் பொழுது சாமுவேல் தீர்க்க தரிசி தைலக்கொம்பை எடுத்து கொண்டு ஈசாயின் வீட்டுக்கு வருகிறார். அவருக்கு இருக்கிற அணைத்து பலமுள்ள பிள்ளைகளை தேவன் தேர்ந்தெடுக்கவில்லை, மேலும் தேவம் சாமுவேலிடம் சொல்கிறார் மனுஷன் முகத்தை பார்க்கிறான் தேவனோ இருதயத்தை பார்க்கிறார். எனவே சாமுவேல் ஈசாயிடம் உனக்கு வெறும் மகன் இருக்கிறாரா என்று கேட்கும் பொழுது ஒருவன் இருக்கிறான். அவன் தாவீது ஆடுகளை மேய்த்து கொண்டு இருக்கிறான். சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை அபிஷேகித்த பொழுது தேவன் அதனை அங்கீகரித்தார். மிகுந்த பலமுள்ள கோலியாத்தை கண்டு இஸ்ரவேல் நடுங்கியது ஆனால் சிறிய பலமில்லாத தாவீது தேவனின் நாமத்தில் கோலியாத்தை முறியடித்தார். தேவன் அப்டித்தான் நம்மை அழைத்து இருக்கிறார். 

I கொரிந்தியர் 1:28
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.

இழிவான நம்மை, அற்பமாய் எண்ணப்பட்ட நம்மை, இல்லாத நம்மை உங்கள் சத்துருக்களை அவமாக்கும்படி தெரிந்து கொண்டார். ஆண்டவர் அப்படி தான் யோசேப்பை தெரிந்து கொண்டார். சகோதரர்கள் மத்தியில் அற்பமாய் எண்ணப்பட்ட அவரை தேவன் எகிப்து தேசத்தில் அதிபதியாக வைத்தார். ஆகவே நம்முடைய அழைப்பு உன்னதமான அழைப்பு அதை எண்ணி தேவனை ஸ்தோத்தரிப்போம்.





FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment