கன்மலை கிறிஸ்துவ சபை 2020 வருட வாக்குத்தத்தம்
Word of God : Brother Micheal
நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்
ஆதியாகமம் 26:1
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
ஆதியாகமம் 26:2
கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.
ஆதியாகமம் 26:3
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
1. அவர் உன்னை ஆசீர்வதித்து நூறு மடங்கு பலன் அடையச்செய்வார்
ஆதியாகமம் 26:6
ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.
ஆதியாகமம் 26:12
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
ஆதியாகமம் 26:13
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
ஆதியாகமம் 26:14
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு,
ஈசாக்கு கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, அவர் சொன்ன தேசத்தில் குடியிருந்தான். அது போல நமக்கு எத்தனை பஞ்சங்கள் வந்தாலும் சரி, கர்த்தர் சொல்லுகிற இடத்திற்கு கீழ்ப்படிந்து செல்வோம் என்று சொன்னால் நாம் இந்த வருஷத்தில் ஈசாக்கை போல நூறு மடங்கு பலனை அடையலாம்.
இந்த வருடத்தில் நீங்கள் கீழ்ப்படிந்தால் மூன்று விதமான காரியங்களை கர்த்தர் உங்களுக்கு செய்ய வல்லவராய் இருக்கிறார்
1. ஐஸ்வர்யவானாக்குவார்
2. உங்கள் எல்லைகளை விஸ்தாரப்படுத்துவார்
3. உன்னை மகா பெரியவனாகுவார்
2. அவர் உன்னை ஆசீர்வதித்து திருப்திஅடையச்செய்வார்
லூக்கா 9:10
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
லூக்கா 9:11
ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள், அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.
லூக்கா 9:12
சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
லூக்கா 9:13
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.
லூக்கா 9:14
ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது, ஐம்பதுபேராக, உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
லூக்கா 9:15
அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
லூக்கா 9:16
அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
லூக்கா 9:17
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
மத்தேயு 14:18
அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
மத்தேயு 14:19
அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
மத்தேயு 14:20
எல்லாரும் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
பற்றாக்குறை ஏற்படும் தருணங்களிலும் நீங்கள் உங்களிடத்தில் இருக்கிறதை கர்த்தருக்கு உற்சாகமாக கொடுக்கும் பொழுது கர்த்தர் அதனை ஆசீர்வதித்து, திருப்தி அடையச்செய்வார் அதுமட்டுமல்லாமல் மீதியானதை சேர்த்து வைக்கவும் உங்களுக்கு கிருபை அளிப்பார் இந்த வருடத்தில் நீங்கள் சந்தோஷமாக சாப்பிட்டு திருப்தி அடைவீர்கள்.
3. அவர் உன்னை ஆசீர்வதித்து கனிகொடுக்கச்செய்வார்
மாற்கு 11:12
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
மாற்கு 11:13
அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
மாற்கு 11:14
அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.
மாற்கு 11:20
மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.
மாற்கு 11:21
பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
மாற்கு 11:22
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
லூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
லூக்கா 24:51
அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
லூக்கா 24:52
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.
லூக்கா 24:53
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
நம் சாவுக்கேதுவான வாழ்க்கையை மாற்றி மகிமையின் சரீரமாகிய இயேசு நம்மை ஆசீர்வதிக்கிறார் நம் வாழ்க்கையில் நம்மிடம் கனி இல்லாததினாலே சாபத்தின் மத்தியில் கடந்து செல்லக்கூடும் ஆனாலும் நாம் அவருடைய வழியில் நடக்கும் பொழுது இயேசு நம்மை ஆசீர்வதிப்பார் நம் சாபங்கள் எல்லாம் நீங்கி அவருக்காக கனிகொடுக்கிறவர்களாக இருப்போம்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment