Kanmalai Christian Church
Christmas Service 25th December 2019
Word of God: Pastor Jachin Selvaraj (ACA, Purasaiwalkam)
சங்கீதம் 98:2
கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
சங்கீதம் 98:3
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
கர்த்தர் தமது இரட்சிப்பை பிரஸ்தாபமாக்குகிறவர்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததே இரட்சிப்பை பிரஸ்தாபம் பண்ணவேதான்.
லூக்கா 19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
எபேசியர் 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
எபேசியர் 4:31
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
பாவத்தில் இருந்து நம்மை மீட்கும்படியாக, முழுவதுமாக விடுதலை பெற்ற பிள்ளைகளாக, பரிசுத்தமாக்கப்பட்ட பிள்ளைகளாக அவருடைய நற்சாட்சிகளாய் நாம் இருக்க வேண்டும் என்றே நம் ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவர் நமக்கு கொடுத்த இந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை நாம் காத்துக்கொள்வோம்.
தமது நீதியை விளங்கப்பண்ணினார்
யோவான் 1:29
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:30
எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
இப்படியாக யோவான் எல்லா ஜனங்களுக்கும் முன்பதாக இயேசுவை பற்றி பேசுகிறார்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
யோவான் 18:37
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததே எல்லா ஜனங்களுக்கும் சத்தியத்தை சாட்சியாய் அறிவிக்கவேதான். நான் எதற்காக வந்தேன் என்று பிலாத்து அறியும் படியாக இயேசு இவ்வாறு சொன்னார்.
எபேசியர் 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்
பூமியின் எல்லைகள் எல்லாம் தேவனுடைய இரட்சிப்பை கண்டது
மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
ஏசாயா 25:8
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
ஏசாயா 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.
No comments:
Post a Comment