Monday, December 9, 2019

நானே


கன்மலை கிறிஸ்துவ சபை 
Word of God : Brother Micheal
Date : 08.12.2019


சுவிசேஷ புத்தங்களிலேயே தனி சிறப்பு வாய்ந்தது யோவான் எழுதிய நற்செய்தி. மற்ற சுவிசேஷ புத்தகங்கள் வலியுறுத்தும் கருத்திலும் அதிகவேறுபாடுகளைக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் நிகழ்வுகளை மிகவும் வித்தியாசமாகத் தருகிறது யோவான் எழுதிய சுவிசேஷ புஸ்தகம். இயேசு கிறிஸ்துவின் தெய்வ தன்மையை யோவான் இந்த புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

1. நானே வாசல் 

யோவான் 10:9
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

2. நானே நல்ல மேய்ப்பன் 

யோவான் 10:11
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

சங்கீதம் 23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

சங்கீதம் 23:2
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

சங்கீதம் 23:3
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

3. நானே ஜீவ அப்பம் 

யோவான் 6:48
ஜீவ அப்பம் நானே.

மத்தேயு 4:2
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

மத்தேயு 4:3
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

4.நானே உயித்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்

யோவான் 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

5. நானே வழி 

யோவான் 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

6. நானே மெய்யான திராட்சை செடி 

யோவான் 15:5
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

யோவான் 15:6
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

7. நானே ஒளி 

யோவான் 8:12
மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.






FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment