Tuesday, July 8, 2025

யாக்கோபை நான் சிநேகித்தேன்

 


Kanmalai Christian Church
Word of God : Pas. Micheal
Date : 06.07.2025

மல்கியா 1:1
மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.

மல்கியா 1:2
நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரனல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.

மல்கியா 1:3
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.

தேவன் ஏன் ஏசாவை வெறுக்க வேண்டும். ஏன் யாக்கோபை சிநேகிக்க வேண்டும்.

ஏசாவிடம் காணப்பட்ட நற்பண்புகள் 

1. ஏசா தகப்பனுக்கு கீழ்ப்படிபவராக இருந்தார் 

ஆதியாகமம் 27:1
ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

ஆதியாகமம் 27:2
அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.

ஆதியாகமம் 27:3
ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி,

ஆதியாகமம் 27:4
அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.

2. ஏசா தகப்பனை பகைக்கவில்லை 

ஆதியாகமம் 27:41
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.

3. ஏசா தகப்பனை துக்கப்படுத்தவில்லை 

ஆதியாகமம் 27:41
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.

4. ஏசா சகோதரன் மீது அன்புள்ளவராய் இருந்தார் 

ஆதியாகமம் 33:4
அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

5. ஏசா பண ஆசை இல்லாதவராக இருந்தார் 

ஆதியாகமம் 33:8
அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

மேலே நாம் கண்டது எல்லாம் ஏசாவிடம் காணப்பட்ட நல்ல பண்புகள். ஆயினும் ஏன் தேவன் ஏசாவை வெறுக்க வேண்டும். இவை எல்லாம் உலக பிரகாரமான குணநலன்கள் ஏசாவிடம் இருந்தன. ஆனால் தேவன் நேசிப்பதற்கு அவர் எதிர்பார்த்த குணநலன்கள் ஏசாவிடம் காணப்படவில்லை யாக்கோபிடம் அது இருந்தது. நாமும் யாக்கோபிடம் இருந்த பண்புகளை கைக்கொண்டு தேவனுடைய சித்தத்தின் படி செய்து தேவன் சிநேகிக்கிற பிள்ளைகளாக இருப்போம். 

தேவன் ஏன் யாக்கோபை சிநேகித்து ஏசாவை வெறுக்க வேண்டும் ?

1. ஏசா வனசஞ்சாரியாக இருந்தார் - யாக்கோபு கூடாரவாசியாக இருந்தார் 

ஆதியாகமம் 25:27
இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.

ஏசா வனசஞ்சாரியாக இருந்தார். அவர் குடும்பத்துடன் ஐக்கியப்படவில்லை ஆனால் யாக்கோபு கூடாரவாசியாக இருந்தார். தன் தகப்பன், தாயுடன் சஞ்சரிப்பவராக இருந்தார். 

2. ஏசா தன் விருப்பப்படி மணந்தார்  - யாக்கோபு பெற்றோர் சித்தப்படி மணந்தார் 

ஆதியாகமம் 26:34
ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.

ஆதியாகமம் 26:35
அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.

ஏசா தனது பெற்றோரின் வழிகாட்டுதல் இல்லாமல் அவராகவே தெரிந்து கொண்டார், அவர்கள் ஏசாவின் பெற்றோர்க்கு மனநோவாயிருந்தார்கள். யாக்கோபு அவ்வாறு செய்ய வில்லை, தன் தாயின் விருப்பப்படி கீழ்ப்படிந்து சென்றார். 

3. ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்டார் - யாக்கோபு சேஷ்டபுத்திர பாகத்தை உடையவரானார் 

எபிரெயர் 12:16
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

ஏசா சாதாரண ஒரு வேலை போஜனத்துக்காக தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தையே பொறுப்பு இல்லாமல் யாக்கோபிடம் விற்றுப்போட்டார். இது தேவனுடைய பார்வைக்கு பிரியமானதாக காணப்படவில்லை. 

4. ஏசாவுக்கு வாக்குத்தத்தம் குறித்த தரிசனம் இல்லை  - யாக்கோபு வாக்குத்தத்திற்கு உடையவரானார் 

ஆதியாகமம் 25:31
அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.

ஆதியாகமம் 25:32
அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.

ஆதியாகமம் 25:33
அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.

சேஷ்ட புத்திரபாகம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது ஏசாவுக்கு தெரியவில்லை. வெறும் ஒரு வேலை உணவுக்காய் தன் சேஷ்டபுத்திர பாகத்தை ஏசா விற்றான். அதின் மதிப்பை யாக்கோபு உணர்ந்தர்வராய் இருந்தார். ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபு பெற்றுக்கொண்டார். 

5. ஏசா ஆசீர்வாதத்தை இழந்தார் - யாக்கோபு ஆசீர்வாதத்தை உடையவரானார் 

எபிரெயர் 12:17
ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.

ஆதியாகமம் 27:34
ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

தனக்கு உண்டான சுதந்திரத்தை யாக்கோபு பொறுப்பு இல்லாமல் அற்ப காரியங்களுக்காக இழந்து விட்டார், அதனால் அதை பின்பாக வாஞ்சித்தும் அதை பெற்று கொள்ள முடியாமல் போய்விட்டது, தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றி முடிக்க ஏசாவை விடம் யாக்கோபிடமே அந்த தகுதிகள் இருந்தன. விசுவாசம் உள்ளவர்களை தான் தேவன் தெரிந்து கொள்கிறார். 






Kanmalai Christian Church
Pastor Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment